கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் கைச்சாத்திட்ட ஈ 8 விசா ஒப்பந்தம் காரணமாக 20 வருடங்களுக்கும் அதிக காலம் அதிகமான இலங்கை இளைஞர்களுக்கு கிடைக்கப்பெற்ற ஈ 9 விசா குழுவில் தொழில் இல்லாமல்போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத விசா அனுமதி பத்திரத்தை சட்ட ரீதியாக்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு எந்தவகையிலும் முடியாது என பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.
தென் கொரியாவின் ஈ 8 விசாவில் பருவகால தொழிலுக்காக செல்ல வெளி நபர்களுக்கு பணம் வழங்கிய சிலர் பத்தரமுல்லை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்னால் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈ 8 விசா என்பது சரியான முறையில் ஆட்களை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதற்கு பின்பற்றிய முறையல்ல. தென்கொரியாவில் பருவகால தொழிலுக்காக தொழிலாளர்களை அனுப்புவதற்கு தனியார் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் எந்த வகையிலும் அனுமதி வழங்கியதில்லை. பணியகத்திக் சட்டத்தின் பிரகாரம் தொழிலாளர்களை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதாக இருந்தால், பணியகத்தின் பதிவை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
பணியகம் ஈ 8 விசா குழுவின் கீழ் தொழில் பெற்றுக்கொடுக்க அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான பிரேரணையின் சட்டமூலம் ஒன்றை மே மாதம் 14ஆம் தினதி தயாரித்து இருக்கிறது. அதற்கிடையில் தென்கொரியாவின் இலங்கை தூதுதகர காரியாலயம் ஜூன் மாதம் 8ஆம் திகதி பணியகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, கொரியாவின் வண்டு மாகாணத்தில் பருவகால தொழிக்கு தொழிலாளர்களை இணைத்துக்கொள்வதை இலகுபடுத்துமாறு கோரி இருந்தது. அந்த கடிதத்துக்கு பதில் கடிதமாக பணியகத்தின் முன்னாள் தலைவர் மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பி, பண்டு மாகாணத்துடன் இருக்கும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் பணியம் அறிவுறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அதற்கு மத்தியில், ஈ 8 விசா குழு சட்டபூர்வமானது என தெரிவித்து சுற்று நிருபம் ஒன்றை வெளியிடுமாறு பணியகத்தின் முன்னாள் செயலாளர் பணியகத்தின் பொது முகாமையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதற்கு பொதுமுகாமையாளர், இந்த தொழில்களுக்கு செல்வதாக இருந்தால் முறையான தொழில் ஒப்பந்தம் தேவை எனவும் தொழில் கட்டளை கோரல் தூதரக காரியாலயம் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு முறைமை செயற்படுத்தப்படும் போதுதான், வண்டு மாகாணத்துடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளதாக வதந்தி ஒன்று பிரசாரமாகி வருகிறது. முன்னாள் அமைச்சர் ஒருவர் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளவதற்கு முன்னர், அரசாங்கத்தின் எந்த அனுமதியையும் இல்லாமல் தனிப்பட்டவகையில் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளார்.
குறித்த அமைச்சருடன் இருக்கும் தொடர்புகள் மூலம் வெளி நபர்கள் இளைஞர்களை பயிற்றுவித்து தொழிலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். இது உண்மையில் ஆள் கடத்தல் வியாபாரத்துக்கு ஒப்பான குற்றமாகும்.
அதனால் இது தொடர்பாக நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று இது தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு அறிவித்திருக்கிறோம். அத்துடன் உள்ளக விசாரணை ஒன்றையும் மேற்கொண்டு வருகிறோம்.
இது முற்றாக சட்டவிரோத செயலாகும். இதில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு தொழில் எதிர்பார்ப்புடன் இருப்பவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதனால் ஈ8 விசாவில் தொழிலுக்கு செல்வதை ஒருபோதும் எங்களுக்கு அனுமதிக்க முடியாது.
கிடைக்கப்பெற்ற தென் கொரியாவுக்கான தொழில் வாய்ப்புக்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிறுத்தி வைத்துள்ளதாக யாராவது தெரிவிப்பதாக இருந்தால் அதில் எந்த உண்மையும் இல்லை.
பணியகத்துக்கு தெரியாமல் விசா கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த விடயங்களில் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சர் விஜித்த ஹேரத் எங்களுக்கு ஆலோசணை வழங்கி இருக்கிறார்.
எனவே ஈ8 விசா மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் எங்களுக்கு தகவல் வழங்கினால் அவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெற்றுக்கொடுக்க நாங்கள் தயார் என்றார்.