கோத்தபாய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இல்லை. கடந்த ஆட்சியில் கோத்தபாய போட்ட விளையாட்டுக்களை இந்த ஆட்சியில் முன்னெடுக்க முடியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு பயந்துகொண்டே செயற்பட்டார். இதற்கு என்னிடம் சிறந்த உதாரணம் உள்ளது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
‘ஒரு நாள் இராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை அழைத்து மஹிந்த ராஜபக்ஷ கலந்துரைடிக் கொண்டிருந்தார். அதாவது யுத்தம் நிறைவடைந்துள்ளமையால் எவ்வாறு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார். திடீரென ஒருவர் ஓடி வந்து மஹிந்த ராஜபக்ஷவின் காதில் ஏதோ கூறினார்.
அதிர்ச்சியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகளை நோக்கி கையசைத்து இங்கிருந்து போய்விடுங்கள் கோத்தா வாரார் கோத்தா வாரார் என்றார்.
இதனையடுத்து குறித்த அதிகாரிகளை அவசரமாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரியாமல் ஒரு அறையில் அடைத்து பூட்டினார். பின்னர் கோத்தபாயவுடன் கதைத்துக்கொண்டிருந்தார். இதுவே மஹிந்த ராஜபக்ஷ சமாதானத்தை ஏற்படுத்திய முறையாகும் என்றார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.