நீதி அமைச்சின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு

7 0

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அயெஷா ஜினசேன  ஞாயிற்றுக்கிழமை  (24)  தனது கடமைகளை நீதி அமைச்சில் பாெறுப்பேற்றார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் 32 வருடகாலம் சேவை செய்த இவர், நீதி அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர்  சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிசிட்ட ஜெனரலாக செயற்பட்டு வந்தார்.

செயலாளர் கடமைகளை பொறுப்பெற்கும் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹரஷன நாணயக்கார, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ராேஹன சப்புகஸ்கந்த, சட்ட வரைபாளர் ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி சமரவீர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.