தமிழீழத் தேசியத் தலைவருக்கு 70 ஆவது அகவை வாழ்த்து.-குறியீடு இணையம்.

23 0

ஏழு பத்தாண்டுகள் அங்கோர் நாள்
எட்டு திசையும் ஒருங்கு நோக்க
தமிழுக்கு ஓர் வினை செய்திட
பட்டுக் கையில் ஏந்தினள் தலைவனை.

முதல் அடி வைத்த மண்ணது
அவன் சொந்த நிலமென்ற-வீறு
அடுத்த பத்தாண்டுகள் நிதானம் சிரசில்
மகோன்னத தலைவன் – ஆகினன்.

பதின்ம வயதில் சீரிய சிந்தனையாக
வீட்டு வாசல் வரை வந்து – நின்ற
இனவிரோதக் கொடுங் கோண்மை
களமிறங்கித் தானைத் தலைவன் – ஆகினன்.

போர் என்றால் போர் என்றிட
வீறு கொண்டே வேங்கை – ஆகிட
கால் தெறிக்க எதிரி ஓடிட
கட்டியம் கூறி நின்றார் – விடுதலை
உயிரென இன்னமும்
கனன்று கொண்டிருக்கும்
அவர் விடுதலை வேட்கை – தலைவா!
உன்னதன் பிறப்பு எழுபது ஆகிவர
என்றும் வாழி!

நீ நீடு வாழ்த்துகிறோம்.

வெல்லும் தமிழ் ஈழம்