அம்பாறை – இறக்காமம் மாயக்கல்லி மலையில் இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் தொடர்பில் ஆராய கிழக்கு முதலமைச்சர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க கிழக்கு மாகாண சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு மாகாண காணியமைச்சர்,அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், காணி ஆணையாளர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட்ட பலர் இந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கிழக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை வரும் வரை இறக்காமம் மாயக்கல்லி மலையில் எவருக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அறிவித்துள்ளார்.