மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை வழங்க இலங்கை மின்சார சபைக்கு எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி வரை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியுள்ளது.
மின்சார சபையின் கோரிக்கைக்கமைய இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதிக்குள் உத்தேச மின்சார கட்டண திருத்தத்துக்கு அனுமதி வழங்க முடியும் என இலங்கை மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.