குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்களின் விரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் அறிவித்துள்ளது.
இதற்கான இறுதி திகதி கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் மீண்டும் டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டில் பணி புரியும் அனைத்து இலங்கை தொழிலாளர்களும் அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவித்திருக்கும் இடங்களில் தங்களின் விரல் அடையாளத்தை பெற்றுக்கொடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொள்கிறது.
அதன் பிரகாரம் விரல் அடையாளத்தை குவைத் நாட்டுக்கு சொந்தமான ‘சாஹெல்’ மென்பொருளை பயன்படுத்தி அல்லது ‘மெட்டா’ என்ற இலத்திரணியல் முறை ஊடாக விரல் அடையாளத்தை வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும். அதேபோன்று இணையவழி முறைமையில் விரல் அடையாளத்தை பெற்றுக்கொடுக்க பொருத்தமான இடமொன்றை தெரிவு செய்துகொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் ஹவாலி, பர்வானியா, அஹமட், முபாரக் அல் கபீர், ஜஹ்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு பணிப்பாளர் காரியாலயங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக அலி சபா, உம்முல் ஹயமான் மற்றும் ஜஹ்ரா பிரதேசங்களில் அமைந்துள்ள விரல் அடையாளம் வழங்குவதற்கான நபர்கள் விசாரணை மேற்கொள்ளும் திணைக்களத்தில் மேற்கொள்ள முடியும்.
விரல் அடையாளத்தை வழங்காத வெளிநாட்டவர்களின் அனைத்து அரச மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படும் என அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ‘த டைம்ஸ் குவைத்’ பத்திரிகைக்கு அறிவித்துள்ளது.