இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைகளுக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார தொடர்புகளை பலப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை; கைச்சாத்திட அமைச்சரவை அனுமதியளித்ததாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்கள் குறித்து அந்நாட்டு அரசுடன் விரிவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.