வட மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை (23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, அண்மையில் புதிதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக பதவியேற்றிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டிருந்தார்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
அதனை தொடர்ந்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை படிப்படியாக தான் முன்னெடுப்பதாக மீனவர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்தார்.