நீர்கொழும்பில் படகு கவிழ்ந்து தந்தை, மகள் மாயம்

7 0

நீர்கொழும்பு முன்னக்கரை களப்பு பகுதியில் சிறிய ரக படகொன்று மற்ற படகுடன் மோதி கவிழ்ந்ததில் தந்தை, மகள் என இருவர் காணாமல்போன சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.

7 பேர் பயணித்த இப்படகு கவிழ்ந்ததையடுத்து, 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 50 வயதுடைய தந்தையும் 20 வயது மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர்களில் மூவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, காணாமல்போன தந்தையையும் மகளையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.