வெளிவிவகார செயலாளரை சந்தித்த சீன, இந்திய இராஜதந்திரிகள் !

7 0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோர் வெளியுறவுச் செயலாளர் ரணராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவரது நியமனத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய உயர்ஸ்தானிகர் தனது சந்திப்பின் போது வெளிவிவகார செயலாளர் அருணி ரணராஜாவின் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், பரந்தளவிலான இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பன்முகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீன தூதுவர் தனது சந்திப்பில் வெளிவிவகாரச் செயலாளருக்கு வாழ்த்தியுள்ளதோடு, இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியை மேம்படுத்துதல், இரு நாடுகளுக்கு இடையே நடைமுறை ஒத்துழைப்பை ஆழமாக்குதல் மற்றும் பொதுவான அக்கறையுள்ள பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பும் ஆழமான கருத்துக்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் சீன தூதுவர் புதிய சபாநாயகர் அசோக ரன்வாலாவைச் சந்தித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், இருநாட்டு சட்டமன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பரிமாற்றங்களை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.