மன்னார்- அடம்பன் பிரதேச மாவீரர் பெற்றோருக்கான மதிப்பளிப்பு 2311.2024 காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அடம்பன் கூட்டுறவு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமைக்கிணங்க மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், உறவுகள் என 100 க்கு மேற்பட்டோர் வருகைதந்திருந்தனர். பொதுச்சுடரேற்றப்பட்டு, பின் ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.மாவீரர்களின் நினைவு சுமந்து உரை நிகழ்த்தப்பட்டது. பின் தேனீர், சிற்றுண்டி வழங்கி வைக்கப்பட்டது. இறுதியாக உலருணவு, பழமரக்கன்று வழங்கிவைக்கப்பட்டது.நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
Video Player
00:00
00:00
Video Player
00:00
00:00