குமாரபுரம் தமிழர் படுகொலை வழக்கு – சந்தேகநபர்கள் விடுதலை

320 0

img1120309017_1_1திருகோணமலை – குமாரபுரத்தில் இடம்பெற்ற படுகொலை தொடபில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 6 இராணுவத்தினர் குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1996ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் 24 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக திருகோணமலை – தெஹிவத்த முகாமைச் சேர்ந்த குறித்த இராணுவத்தினர் கைது செய்யப்பட்டதுடன், வழக்கு விசாரணை மூதூர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, பலர் சாட்சி வழங்கி இருந்தனர்.

பின்னர் இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இராணுவத்தினர் 6 பேரும் குற்றமற்றவர்கள் என்று அறிவித்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.