கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க: ஓபிஎஸ் வலியுறுத்தல்

12 0

கரோனாவால் உயிரிழந்த முன்​களப் பணியாளர்​களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வலியுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக​வின் தேர்தல் அறிக்கை​யில் “பணி​யில் இருந்த​போது கரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்​துவர்​கள், மருத்​துவம் சார்ந்த பணியாளர்​கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்​கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்​களின் குடும்பத்​தா​ருக்கு உரிய இழப்​பீடு வழங்​கப்​படும்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர். ஆனால், திமுக அரசு பொறுப்​பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலை​யில், அதை செயல்​படுத்​தவில்லை.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பள்ளிப்​பட்டு அரசு மருத்​துவ​மனை​யில் பணியாற்றிய மருத்​துவர் விவே​கானந்தன் 2020 நவ. 22-ம் தேதி கரோனா தொற்று காரணமாக உயிரிழந்​தார். அவருக்கு மனைவி​யும், இரு குழந்தை​களும் உள்ளனர். அவர் இறந்து 4 ஆண்டுகள் முடிந்​துள்ள நிலை​யில், இதுவரை அவருக்கு தமிழக அரசு சார்​பில் இழப்​பீடோ, கருணை அடிப்​படையிலான வேலையோ வழங்​கவில்லை. மருத்துவரின் தந்தை​தான் அந்தக் குடும்பத்தை தற்போது காப்​பாற்றி வருகிறார்.

ஓர் அரசு ஊழியர் பணியில் இருக்​கும்​போது இறந்​தால், அவருடைய குடும்பத்​தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்​கப்பட வேண்​டும். ஆனால், மருத்துவர் விவே​கானந்​தனின் மனைவிக்கு இது வரை அரசுப் பணி வழங்​கப்​பட​வில்லை. இது மிகவும் வருந்​தத்தக்​கது. இதுபோல பல மருத்​துவர்​கள், மருத்​துவம் சார்ந்த பணியாளர்​கள், செவிலியர்களுக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்​கவில்லை.

எனவே, மருத்​துவர் விவே​கானந்தன் குடும்பத்​துக்கு ரூ.25 லட்சம் இழப்​பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்​டும். கரோனாவால் பாதிக்​கப்​பட்டு உயிரிழந்த இதர முன்​களப் பணி​யாளர்​களுக்கு இழப்​பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்​டும். இவ்​வாறு கூறப்பட்​டுள்​ளது.