கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் 27 வயதுடைய மகன் சந்தேகத்தின் பேரில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் மனைவி அயலவர்களிடம் உதவி கோரியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொலை செய்யப்பட்டவரின் மகனை கைது செய்துள்ளனர்.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.