இலங்கையின் இனரீதியான பாரபட்சங்களை களைய, ஜேனீவாவில் விசேட கூட்டத்தொடர்

323 0

UNஇனரீதியான பாரபட்சங்களை கலைவதற்கான ஐக்கிய நாடுகளின் குழு, ஜேனீவாவில் விசேட கூட்டத் தொடரை நடத்தவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2அம் திகதி முதல் 26அம் திகதி வரையில் இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

இதில் இலங்கையின் நிலவும் இனரீதியான பாகுபாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15அம் மற்றும் 16அம் திகதி இலங்கை தொடர்பில் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

இதன்போது 18 பேர் கொண்ட சர்வதேச சுயாதீன நிபுணர்களின் இலங்கை தொடர்பான அறிக்கையும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பல்வேறு அறிக்கைகளும் முன்வைக்கப்பட்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்படவுள்ளன.