தமிழரசின் பாராளுமன்றக்குழு கூடி புதிய பதவிகளை நியமித்தது

10 0

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (21) பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுக்களுக்கான பதவி நிலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், பாராளுமன்றக்குழுவின் செயலாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஊடகப்பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன் தெரிவாகியுள்ளதோடு, கொரடாவாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர்.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில் தொடர்ச்சியாக பாராளுமன்றக்குழுக் கூட்டத்தினை கிரமமாக நடத்துவதென ஏகோபித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக ஆவணத்திரட்டொன்றை தாயாரிப்பதெனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.