உக்ரைன் தலைநகர் மீது ரஸ்யா உக்கிரமான வான்தாக்குதலை மேற்கொள்ளலாம் என அச்சம் – பல நாடுகள் தூதரகங்களை மூடின

7 0
image
உக்ரைன் தலைநகர் கீவ்மீது நவம்பர் 20 ம் திகதி ரஸ்யா மிகக்கடுமையான தாக்குதலில் ஈடுபடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அமெரிக்க தூதரகம் உட்பட பல நாடுகள் தங்களின் தூதரகங்களை மூடியுள்ளன.

அமெரிக்க உக்ரைன் தலைநகரில் உள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.

இத்தாலி கிரேக்கம் ஆகிய நாடுகளும் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ஸ்பெயின் பல மணிநேரம் தூதரகத்தை மூடிய பின்னர் அதனை திறந்துள்ளது.

இதேவேளை தூதரகங்கள் தாக்கப்படலாம் என்ற தகவலை பரப்புவதன் மூலம் ரஸ்யா உளவியல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.