பைடனின் அடுத்த அதிரடி தீர்மானம் – உக்ரைனிற்கு கண்ணிவெடிகளை வழங்க முடிவு

14 0
உக்ரைனிற்கு நிலக்கண்ணிவெடிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார்.

உக்ரைனில் ரஸ்ய படையினரின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக அமெரிக்கா உக்ரைனிற்கான  இராணுவஉதவிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையிலேயே கண்ணிவெடிகளை வழங்குவதற்கு ஜோ பைடன்  அனுமதிவழங்கியுள்ளார்.

பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இந்த நிலக்கண்ணி வெடிகளை பயன்படுத்தப்போவதில்லை என  உக்ரைன் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் குறிப்பிட்ட காலம்வரை செயற்பாட்டில் இருக்கும் விதத்திலேயே கண்ணிவெடிகளை பயன்படுத்தப்போவதாகவும் உக்ரைன் உறுதியளித்துள்ளது.

நிலக்கண்ணி வெடிகள் தொடர்பான ஜோபைடனின் தீர்மானத்தை உக்ரைன் படையினர் வரவேற்பார்கள் ஆனால் உலகின் ஏனைய பகுதிகளில் இது மிகவும் சர்ச்சைக்குரியதாக காணப்படும் என பிபிசி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான கொள்கை மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவிவகித்தவேளை அமெரிக்க படையினர் நிலக்கண்ணிவெடிகளை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாட்டை நீக்கியிருந்தார் . இதனை ஜோ பைடன் அவ்வேளை கடுமையாக விமர்சித்திருந்தார்.