கிளியில் மண் மாபியாக்கள் தாக்குதல்

15 0

கிளிநொச்சியில் செயற்பட்டுவரும் வடமாகாண பிராந்திய .உள்ளுராட்சி  உதவி ஆணையாளர் அலுவலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் மணல் மாபியா கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உத்தியோகத்தராகக் கடமையாற்றும் குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைச்சிப் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சகிதம் பணியிலிருந்த போது தாக்கப்பட்டதாக இலங்கை வடமாகாண  தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலிற்கு முதல்நாளான கடந்த 13ஆம் திகதி அன்று கரைச்சி பிரதேச சபையின் சபைநிதி மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் அம்பாள்குளம் 2ஆம் குறுக்குத்தெரு வீதியின் புனரமைப்பு வேலைக்காக பறிக்கப்பட்ட கிரவலினை கரைச்சிப் பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகத்தருடன் கூட்டளவு மேற்கொண்டிருந்த வேளை அங்கு வந்த நான்கு ஐந்து பேர் கொண்;ட குழு தாக்குதலை நடாத்தியதாக தெரியவருகின்றது.

கையினாலும் பொல்லுகளாலும் தனது முகத்திலும் தலையிலும் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தாக்கியதாக தாக்குதலிற்குள்ளான தொழில்நுட்ப உத்தியோகத்தர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது கடமையை செய்யவிடாது தடுத்து வீதியில் துரத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்படடதுடன் கொலைசெய்து புதைப்போம் என்றும் கிளிநொச்சி பகுதியில் எங்கு என்னைக் கண்டாலும் கொலைசெய்வேன் என கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவுசெய்துள்ளதுடன்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பியதாக தெரியவருகின்றது.

கடமை நேரத்தில் தாக்கப்பட்டமையினால் தனது கடமையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு மிகவும் அச்சுறுத்தலான சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் பணிகளில் வாக்கெண்ணல் சிரேஸ்ட தiமைத்தாங்கும் அலுவலராக நியமிக்கப்படட்டிருந்தும் தேர்தல் கடமைக்குச் சமூகமளிக்கமுடியவில்லை எனவும் தாக்குதலிற்குள்ளான தொழில்நுட்ப உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடாத்தியவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மணல் கடத்தல் மாபியாக்கள் என தெரிவித்துள்ள இலங்கை வடமாகாண  தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் பணியில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசு தவறினால் தொடர் பணிபுறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.