கடந்த 2006ம் ஆண்டு முதல் வன்னியில் ஊடக பணியாற்றி வந்த சுப்புராசா ஜெயலட்சுமணன் (ஆர்.எஸ் றஞ்சன்) இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மண்ணின் ஊடக நண்பனாக அடையாளப்படுத்தப்பட்ட ரஞ்சன் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பினால் கோமா நிலைக்கு சென்றிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பயனளிக்காது நேற்று செவ்வாய் மாலை அவர் இயற்கை எய்தியுள்ளார்.