காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்: அறிவியல் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர்-செயலர் தகவல்

14 0

இந்தியா​விலேயே காப்பு​ரிமை பதிவில் தமிழகம் முதலிடத்​தில் இருப்​பதாக தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்ற உறுப்​பினர்- செயலர் எஸ்.​வின்​சென்ட் தெரி​வித்​தார்.

தமிழ்​நாட்​டில் புது​மையான தொழில்​நுட்​பங்கள் மற்றும் புவிசார் குறி​யீடுகள் தொடர்பாக அறிவுசார் சொத்​துரிமை பிரிவு ஒருங்​கிணைப்​பாளர்​களின் ஆய்வு கூட்டம் சென்னை​யில் உள்ள தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்றத்​தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்​றது.

அம்மன்​றத்​தின் உறுப்​பினர்- செயலர் எஸ்.​வின்​சென்ட் தலைமை​யில் நடந்த இந்த கூட்​டத்​தில் ஒருங்​கிணைப்​பாளர்கள் தங்கள் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்​டனர். நேற்று நிறைவு நாள் கூட்டம் முடிந்த பிறகு செய்தி​யாளர்​களிடம் வின்​சென்ட் கூறிய​தாவது: தமிழகத்​தைச் சேர்ந்த ஆராய்ச்​சி​யாளர்கள் தங்கள் கண்டு​பிடிப்பு​களுக்கு காப்பு​ரிமை கோரி விண்​ணப்​பிக்க உதவுவதற்காக மாநிலம் முழு​வதும் 40 அறிவுசார் சொத்துரிமை பிரிவுகள் இயங்கி வருகின்றன. கலை அறிவியல் மாணவர்கள் மற்றும் பொறி​யியல் மாணவர்​களின் வேலை​வாய்ப்பு திறனை அதிகரிக்​க​வும் அவர்களை தொழில்​முனைவோராக உருவாக்​க​வும் இந்த பிரிவுகள் உதவி செய்கின்றன. படித்து முடிக்​கும் மாணவர்களை வேலை தேடு​வோராக இல்லாமல் பலருக்கு வேலை வழங்கக் கூடிய​வர்​களாக அவர்களை உருவாக்​கும் பணியை மேற்​கொண்டு வருகிறோம்.

புதிய கண்டு​பிடிப்புகளுக்கு காப்பு​ரிமை பெறு​வதுடன் அவற்றை பொருட்​களாக மக்களின் பயன்​பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவி​களை​யும் அறிவியல் தொழில்​நுட்ப மன்றம் செய்து வருகிறது. இதன் மூலம் சமூக பொருளாதார மாற்றம் ஏற்படும். கடந்த 2023-ம் ஆண்டு ஆய்வின்​படி, அகில இந்திய அளவில் அறிவுசார் சொத்​துரிமை பதிவில் தமிழகம் முதலிடத்​தி​லும், மகாராஷ்டிரா 2-ம் இடத்​தி​லும் உள்ளது.

தமிழகத்​தில் காப்பு​ரிமை கோரி 7,500 விண்​ணப்​பங்கள் வரப்​பெற்றன. அதேபோல் புவிசார் குறி​யீடு பெறு​வ​தி​லும் தமிழகம்​தான் முதலிடத்​தில் இருக்​கிறது. காப்பு​ரிமை பெறப்​பட்ட கண்டு​பிடிப்புகளை சந்தைப்​படுத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்​நுட்பக் கல்வி கவுன்​சில் மற்றும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்​சகத்​துடன் இணைந்து புதிய திட்​டத்தை செயல்​படுத்த உள்ளோம். கண்டு​பிடிப்புகள் ஆய்வக நிலையை தாண்டி தொழிற்​சாலை நிலைக்கு வந்து பொருட்களை உற்பத்தி செய்ய வேண்​டும்.

ஆராய்ச்​சியை ஊக்கு​விக்​கும் வகையில் மாநில தொழில்​நுட்ப மன்றம் சார்​பில் ஆண்டு​தோறும் 1,000 ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி​யுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுநிதி​யுதவி கோரி 16 ஆயிரத்துக்​கும் மேற்​பட்​டோர் ​விண்ணப்​பித்​துள்ளனர். அ​தில் 1,000 பேர் தேர்வு செய்​யப்​பட்டு அவர்களுக்கு ரூ.10,000 ஆராய்ச்சி நி​தியாக வழங்​கப்​படு்ம். இவ்​வாறு அவர் கூறினார்​.