பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம் – விபரம்

34 0

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் செவ்வாய்க்கிழமை (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அவர்களின் பெயர் விபரம் வருமாறு,

01 பிரதமரின் செயலாளராக பீ.பீ.சபுதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

02 அமைச்சரவையின் செயலாளராக டபிள்யூ. எம்.டீ.ஜே.பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

03 சிரேஷ்ட பேராசிரியர் கபில சீ.கே.பெரேரா போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

04 கே.எம்.எம்.சிறிவர்தன நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

05 ஜே.எம்.திலகா ஜயசுந்தர கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

06 ஏ.எம்.பீ.எம்.பி.அத்தபத்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

07 பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

08 எச்.எஸ்.எஸ்.துய்யகொன்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

09 டீ.டபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்க்பட்டுள்ளார்.

10 யூ.ஜீ.ரஞ்சித் ஆரியரத்ன நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11 பேராசிரியர்.கே.டீ.எம். உதயங்க ஹேமபால வலுசக்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12 எஸ்.ஆலோக பண்டார பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13 எஸ்.எம்.பியதிஸ்ஸ தொழில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14 ஏ.விமலேந்திரராஜா வர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15 டீ.பி.விக்ரமசிங்ககே. விவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

16 எம்.ஜீ.எஸ்.என்.களுவெவ கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17 ஏ.எச்.எம்.யூ – அருண பண்டார இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

18 அருணி ரணராஜா வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.