ஒரு வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு

15 0

கடற்படையினரால் நாட்டின் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளில் ஒரே வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி 1650 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய 66 கிலோ ஹெரோயின் கைற்றப்பட்டது.

அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை (17) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல நாள் மீன்பிடி படகொன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் திங்கட்கிழமை (18) காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் போது குறித்த படகு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 46 கிலோ 116 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 1152 மில்லியன் ரூபாவென கடற்படை தெரிவித்துள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 – 33 வயதுக்குட்பட்ட கந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 18 790 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.