ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள சூப்பர் 50 நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், சன் ஃபார்மா உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் பலவும் இடம்பிடித்துள்ளன.ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வரும் சூப்பர் 50 நிறுவனப் பட்டியலில், இந்தியாவின் டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், போன்ற இந்திய நிறுவனங்கள் தொடர்ச்சியாக இடம்பிடித்துவந்தன. இந்நிலையில், 2016ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் சூப்பர் 50 பட்டியலில், அதேசமயம், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எம்ஆர்எஃப், கிளாக்சோ ஸ்மித்க்ளைன், பஃபைசர், ரெட்டீஸ் லேப், கிளன்மார்க் ஃபார்மா, கோட்டக் மகிந்திரா வங்கி, ஹெச்டிஎப்சி நிறுவனம் ஆகியவை வெளியேறியுள்ளன.
டிசிஎஸ், சன் ஃபார்மா, இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி இந்தியா, பாரத் ஃபோர்ஜ், அலம்பிக் ஃபார்மா, கில்லட் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், கன்சாய் நெரோலக், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் ஆகிய 14 இந்திய நிறுவனங்கள் புதியதாக இடம்பிடித்துள்ளன. சர்வதேச அளவில், வால்மார்ட், கூகுள் போன்றவை சூப்பர் 50 நிறுவனங்கள் பட்டியலில் முன்னிலை நிறுவனங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.