தேர்தலில் பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை- உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும்!

16 0

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சமூக  ஊடகப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

அனுரகுமார திசநாயக்க அல்லது மக்களால் ஏகேடி என அழைக்கப்படும் இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான தேர்தல் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றார்.அனேகமாக அனைத்து தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

இது இலங்கைக்கு என்னதேவையோ அதனை செய்வதற்கான வலுவான வாக்குறுதியை வழங்குகின்றது.

1

நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன்  ஒரு சிறந்த ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல்

2

பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையில் சிக்கியுள்ளவர்களை அதன் பிடியிலிருந்து மீட்பதற்கான பொருளாதார சீர்திருத்தம்.

3

தேசிய நல்லிணக்கம் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லீம்களிற்கான உரிமைகள்.

4

ஊழலிற்கு எதிராக கடுமையான போராட்டம்

5

சுற்றுலாத்துறையில் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குதல்,சதுப்பு நிலங்கள் வனங்கள் வலுச்க்தி மேலும் சில.

இலங்கையின் அனைத்து நண்பர்களும் அதற்கு உதவ தயாராகவேண்டும்.