2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஒரு வார காலத்துக்கு அமைதியான காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடக பேச்சாளருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை (15) உடன் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஒரு வார காலத்துக்கு அமைதியான காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் அதிகாரிகள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர்.
தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும்.
இந்த ஒரு வார காலத்துக்கு பொது இடங்களில் பிரச்சாரங்களையும், கூட்டங்களையும் நடத்த முடியாது.
இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 18 வேட்பாளர்கள் உட்பட 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலுத் தெரிவித்தார்.