ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம். என்றாலும் இந்த தேர்தல் மூலம் தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கையை வெற்றிகொண்டுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் வரலாற்று வெற்றியை பெறுள்ளது. அதுதொடர்பில் நாங்கள் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோன்று இது இலங்கைக்கு விசேட சந்தர்ப்பமாகும். இலங்கை வரலாற்றில் ஒருபோது எமக்கு நிறைவேற்றிக்கொள்ள முடியாமல்போன விடயமொன்றை தற்போதை ஜனாதிபதியும் அதிகாரத்துக்கு வந்துள்ள அரசாங்கமும் வெற்றி வெற்றுள்ளது. அதுதொடர்பில் இலங்கையர்கள் என்றவகையில் நாங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.
உதாரணமாக சுதந்திரத்துக்கு பின்னர் டி.எஸ். சேனாநாயக்கவுக்கு பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தலைவர்கள் அமைச்சரவையில் பிரதிநிதுத்துவப்படுத்தினாலும் அந்த பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சரவையில் தமிழ் தலைவர்கள் அவர்களுக்குரிய கட்சிகளில் வெற்றிபெற்று பிரதிநிதித்துவம் செய்தே வந்துள்ளது. அதாவது கடந்த அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரதிநித்தும் செய்தாலும் தெற்கு அரசியல் கட்சி ஒன்றை பிரதிநித்துவப்படுத்தி அமைச்சரவையில் செயற்பட வில்லை. அதனால்தான் இது விசேட சந்தர்ப்பம் என தெரிவித்தேன்.
தெற்கு அரசியல் கட்சி ஒன்றை பிரதிநிதித்துவம் செய்து வடக்கு, கிழக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சக்திகளுடன் செயற்பட்டு வரும்போது. தெற்கில் ஒரு அரசியல் கட்சி தொடர்பில் நம்பிக்கை வைத்து விசேட வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கிறது. அதன்போது அவர்களும் அமைச்சரவையின் உறுப்பினர்களாக வருவார்கள். அதனை இலங்கையர்களாக பெற்றுக்கொண்ட வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம்.
எவ்வாறு இருந்தாலும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துக்கு பாரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதனை நிறைவேற்ற முடியாது என தற்போது அவர்களுக்கு தெரிவிக்க முடியாது. தேர்தலை வெற்றிகொண்டாலும் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பல சவால்கள் இருக்கின்றன. அதனை வெற்றிகொள்வதற்கு முடியாமல் போகும் என்றே நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளோம்.
அது நாங்கள் பின்பற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே தெரிவிக்கிறோம். எவ்வாறு இருந்தாலும் ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அதனால் இலங்கையராக தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கையை வெற்றிகொண்டுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோன்று கடந்த எதிர்க்கட்சி அவர்களின் பாெறுப்புக்களை அவர்களுக்கு சரியாக செய்யமுடியவில்லை என நாங்கள் கடந்த காலங்களிலும் தெரிவித்து வந்தோம். எங்களுக்கு புதிய அரசியல் கலாசாரம் தேவையாக இருக்கிறது. புதிய அரசியல் பயணம் ஒன்று தேவையாக இருக்கிறது.
நாங்கள் நம்பும் அரசியல் சிந்தனைக்கு அமைய ஆளும் அரசாங்கம் பொருளாதாரம் தொடர்பில் அதேபோன்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்கள் ஏற்றுக்கொண்ட சவால்களை வெற்றிகொள்ள வேண்டி இருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நாங்கள் இடையூறாக இருக்கக்கூடாது. அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நாங்கள் இலங்கையர்களாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றார்.