இன ஐக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் பெறுபேறுகள் அமைந்துள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் எமக்கு கிடைத்த வெற்றி பெறு வெற்றியாகும் என பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தெரிவான சமன் வித்தியாரத்ன தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிவந்துள்ள பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகளின் மூலம் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு மற்றும் ஒற்றுமையை காணக்கூடியதாக இருக்கிறது. இது அதி விசேட வெற்றியாகும். பதுளையில் நான் பெற்ற வாக்குகளை விட யாழ்ப்பாணத்தில் எமக்கு கிடைத்த வெற்றி பெரு வெற்றியாகவே நான் பார்க்கிறேன்.இந்த பெறுபேறு யாழ்ப்பாண அரசியல் வாதிகளுக்கும் சிறந்த பாடமாகும் என்றார்.