நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது.
12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக இரண்டு மலையக பெண்களும் தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை வரலாற்றில் 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெரும் திருப்பு முனையாக உள்ளது .அதிலும் மலையக பெண்கள் நாடாளுமன்றம் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.