கொழும்பு – மிரிஹான பகுதியில் வியாழக்கிழமை (14) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமக்கு பதவி முக்கியமல்ல, பலமான பாராளுமன்றத்தை அமைப்பதையே எதிரர்பார்த்துள்ளோம். பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. பதவிகள் தொடர்பில் எமது அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.
10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (21) கூடும். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் முன்வைத்த கொள்கைத் திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்துவோம். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு நாங்கள் குறிப்பிடும் போது எதிர்தரப்பினர் பழையவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். பழையவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை ஆராய வேண்டும்.
அத்துடன் அனுபவமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப கூடாது என்று குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. அரச நிதியை மோசடி செய்த அனுபவமும், பாராளுமன்றத்தில் முறையற்ற வகையில் செயற்பட்ட அனுபவமும் எமக்கு கிடையாது.
ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றார்.