தம்பனையில் உள்ள வேடுவசமூகத்தின் பிரதிதலைவர் கன்பன்டிய எத்தோவும் அவரது குடும்பத்தினரும் தேர்தல்வாக்களிப்பு நிலையத்திற்குள் கோடரியுடன் நுழைந்துள்ளனர்.
எனினும் அவரது தோளில் கோடரியை அவதானித்த அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தம்பனை வேடுவ சமூகத்தி;ன் பிரதிதலைவர் வேடுவ சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் உரிமைகள் பற்றி அறியாத அதிகாரிகளை அரசாங்கம் தம்பனையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாடுகளிற்கும் நீதிமன்றங்களிற்கும் கோடாரியுடன் செல்வதற்கு எங்களிற்கு அனுமதி வழங்கியுள்ளனர் வாக்களிப்பு நிலையங்களிற்குள் செல்வதற்கு எந்த தடையும் இருக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.