மட்டக்களப்பில் 357 தேர்தல் சட்ட விதிமீறல்கள் பதிவு – மாவட்ட அரசாங்க அதிபர்

18 0
மட்டக்களப்பில் 357 தேர்தல் சட்ட விதிமீறல்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் இன்று (14) நண்பகல் 12 மணியளவில் இந்து கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான முறையில் நடைபெற்று வருவதாகவும், இன்று முற்பகல் 11.55 மணி வரை கல்குடா தொகுதியில் 28.65 வீதமும், மட்டக்களப்பு தொகுதியில் 30.05 வீதமும், பட்டிருப்பு தொகுதியில் 27.65 வீதமுமாக மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 29.29 வீதமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு தேர்தல் வன்முறை சம்பவங்களும் இதுவரை பதிவாகவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை 357 தேர்தல் சட்ட விதிமீறல்கள் பதிவாகியுள்ளன.

இன்றைய தினத்தில் மாத்திரம் 84 தேர்தல் சட்ட விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்தார்.