குருநகர் புனித யாகப்பர் ஆலயம் அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31வது ஆண்டு நினைவு தினம்

37 0

குருநகர் புனித யாகப்பர் ஆலயம் 1993ம் ஆண்டு அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31வது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (13) நினைவு கூறப்பட்டது.

பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின் நிறைவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

நினைவுத் திருப்பலியினை மண்ணின் மைந்தன் அருட்பணி கை. கனிசியஸ் ராஜ் அடிகளார் ஒப்புக்கொடுத்தார்.