பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

48 0

பிரான்சு பாரிசு நகரில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவரின் வித்துடல் விதைக்கப்பட்ட ஒபேவில்லியே துயிலும் இல்லப் பகுதியில் கடந்த ( 08.11.2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு.சச்சிதானந்தம் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரினை மாவீரர் கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க, மலர்மாலையை அவரின் சகோதரர்கள் அணிவித்தனர்.

அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்திருந்தனர். நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாக செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.அவர் தனது உரையில், கேணல் பரிதி அவர்களின் வாழ்வியல் தொடர்பாகவும் அவரின் நல் வழிகாட்டல்களை நாம் பின்பற்றிப் பயணிக்க வேண்டும் என்பதாக அவரது உரை அமைந்திருந்தது. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.

இதேவேளை கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் காலை 10.00 மணிக்கு சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது..

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -ஊடகப்பிரிவு)