விடுதலைக்காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வு- யேர்மனி கற்றிங்கன்.

863 0

யேர்மன் கற்றிங்கன் நகரில் 09.11.24 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக்காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் நாட்டுப்பற்றாளர் ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கட்கு ஈகைசுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அவரது கணவர் கீதபொன்கலன் மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்து வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு,மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களின் அரங்கமாக விடுதலைகாந்தள் அரங்கம் மாற்றம் பெற்று விடுதலை காந்தள் நிகழ்விலும் பெண்கள் அமைப்பிலும் நாட்டுப்பற்றாளர் கீதபொன்கலன் அவர்களின் அர்ப்பணிப்பை யேர்மன் கிளை பொறுப்பாளர் யோன்பிள்ளை சிறிரவிந்திரநாதன் அவர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மற்றும் பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்களாலும் அவரது பணிகள் எடுத்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வில் விடுதலை நடனம், விடுதலைப் பாடல், விடுதலை பாடலை இசைக்கருவியில் மீட்டுதல் என்ற வகையில் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் பங்குபற்றிய கலைஞர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை அரங்கில் நிரூபித்தனர். விடுதலைக்காந்தள் போட்டி நிகழ்வில் பாலர்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு மற்றும் அதிமேற்பிரிவு ஆகிய பிரிவுகளில் பங்குபற்றிய போட்டியாளர்களில் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற போட்டியாளருக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. முதலாம் இடத்தைப்பெற்ற போட்டியாளருக்கு அதி உயர் விருதான விடுதலைக்காந்தள் எனும் விருதும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

அதி உயர் விருதான விடுதலைக்காந்கள் விருதைப் பெற்ற போட்டியாளர்களின் வரிசையில்
தனிப்பாடல் பாலர் பிரிவில் – செல்வி அனா சோபியா ராஜேந்திரன்
தனிப்பாடல் ஆரம்பபிரிவில் – செல்வி மகீரா மாயா ஆனந்தராஜா
தனிப்பாடல் கீழ் பிரிவில் – செல்வி ஒசரா சஞ்சீவ்குமார்
தனிப்பாடல் மத்திய பிரிவில் – செல்வி அபிநயா நாவேந்தன்
தனிப்பாடல் மேற்பிரிவில் – செல்வி மதூஷா ரஞ்சித்
தனிப்பாடல் அதிமேற்பிரிவில் – செல்வன் அன்ரனி சுலக்சன்
தனி நடனம் மேற்பிரிவில் – செல்வி திவ்யா ரவிச்சந்திரன்
தனி நடனம் அதிமேற்பிரிவில் – செல்வி சுஜானி குமரேஸ் இவ் விருதினைப் பெற்றுக் கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் „தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ எனும் எம் தாரக மந்திரத்துடன் இவ் விடுதலைக்காந்தள் நிகழ்வு நிறைவடைந்தது.