24 மணிநேரத்தில் 231 முறைப்பாடுகள்

22 0

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று (10) முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பானவை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நேற்று (10) வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2811 என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

குறித்த முறைப்பாடுகளில் சட்ட மீறல்கள் தொடர்பான 2,756 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,162 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 649 முறைப்பாடுகளின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது