2007ம் ஆண்டு வடகிழக்கு பிரிக்கப்பட்ட போது கூட்டமைப்பு வழக்கொன்றை தாக்கல் செய்தது.அப்போது சட்டத்தரணியாக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டார்.
எனினும் பின்னர் அவர் வழக்கிலிருந்து தப்பி சென்றார் .ஜேவிபியுடன் டீல் முடித்து அவர் சென்றாரா என்பது இன்று வரை தெரியவில்லையென கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில் அப்போது அரசியலில் இல்லாத சுமந்திரன் முதுகெலும்பில்லாமல் ஓடிவிட்டு தற்போது வீரக்கதை பேசுவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே சிங்கள பெரும்பான்மை வாக்குகளுடன் ஐனாதிபதி பதவிக்கு வந்த கோட்டாபய ராஐபக்ச இரண்டு வருடங்களில் துரத்தப்பட்டதைப் போல அநுரவுக்கு எத்தனை வருடங்களோ தெரியவில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இப்போது பலரும் மாற்றம் வேண்டும் எனக் கூறுகின்றனர். அது எங்கள் கொள்கையில் மாற்றமில்லாது காலத்தோடு வரும் மாற்றங்களை செய்துள்ளோம். எப்போதுமே கொள்கை மாறா அடையாளம் மாறாத கட்சியாக எமது கட்சி திகழ்ந்து வருகிறது.
மேலும் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள ஐனாதிபதி அநுரகுமார பலதையும் செய்வதாக சொல்லியிருக்கிறார். ஆகவே அவர் சொன்னதை செயலில் செய்து காட்ட வேண்டும். அதனைவிடுத்து அதற்கு மாறாக அவர் செயற்படக் கூடாது.
ஆனால் இப்போது அதற்கு மாறான நிலைப்பாடுகளை எடுத்து சறுக்கத் தொடங்கி இருக்கிறார். இவ்வாறு தாம் சொன்னதை தாமே செய்யாமல் இருப்பது அவருக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிங்கள பெரும்பான்மை வாக்குகளுடன் ஐனாதிபதி பதவிக்கு வந்த கோட்டாபய ராஐபக்ச இரண்டு வருடங்களில் துரத்தப்பட்டார். அதேபோல இவருக்கும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து ஜனாதிபதியாக்கியிருக்கிறார்கள்.
அதனால் சிங்கள பெரும்பான்மை மக்களை மீறி எதனையும் செய்ய முடியாமல் தாம் சொன்னதை மீறியே செயற்படுகின்ற நிலைக்கு வந்துள்ளார். ஆக கோட்டாபய போல இவரும் செயற்பட முயன்றால் இவருக்கும் எத்தனை வருடங்களோ தெரியவில்லை.
ஆக மொத்தத்தில் இப்போதைய ஐனாதிபதியின் செயற்பாடுகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றது.