லக்கலை, தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனங்காணாத ஐந்து நபர்கள், வர்த்தகரின் மனைவி மற்றும் தந்தையிடம் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி அவர்களின் கைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
07 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள் , பணம் மற்றும் கார் உள்ளிட்ட பொருட்களே கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் கார் கலேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து இன்று திங்கட்கிழிமை (11) கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.