கெஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் புகுந்த மூவர் 24 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், இரு பெண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெஸ்பேவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போதே இவர்கள் நேற்று சனிக்கிழமை (09) கைது செய்யப்ட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 29 வயதுடைய பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது ,
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் திருட்டுக்கு உதவியவர் என்பதுடன் மற்றையவர் திருடப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்தியவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் இருந்து , வெவ்வேறு நிறைகொண்ட 04 தங்கத் துண்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை , இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக , மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.