2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,500ஐ தாண்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று (09) மாத்திரம் 232 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,580 ஆக அதிகரித்துள்ளது.
வன்முறை தொடர்பான 20 முறைப்பாடுகள் அவற்றுள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பெறப்பட்ட முறைப்பாடுகளில் இதுவரை 1999க்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 581 முறைப்பாடுகள் தீர்க்கப்பட உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.