நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
- கேகாலை – தெஹியோவிட்ட , யட்டியந்தோட்டை, புளத்கொஹுபிட்டிய , ருவன்வெல்ல, தெரனியகல, கலிகமுவ , அரநாயக்க
2. இரத்தினபுரி – குருவிட்ட, எஹெலியகொடை
3. பதுளை மாவட்டம் – ஹல்தும்முல்ல, வெலிமடை, லுணுகலை, பண்டாரவளை
4. கண்டி மாவட்டம் – ஹரிஸ்பத்துவ, தெல்தோட்டை,
5. மாத்தளை மாவட்டம் – இரத்தோட்டை
- இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
1. பதுளை மாவட்டம் – பசறை, ஹாலிஎல,
2. கண்டி மாவட்டம் – பாததும்பர, தும்பனை , உடுதும்பர, யட்டிநுவர
3. நுவரெலியா மாவட்டம் – வலப்பனை