கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் புதிய நோயாளர் காவு வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் புதிய நோயாளர் காவு வண்டி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை முலலைத்தீவு மூங்கிலாறு வைத்தியசாலைக்கும், யாழ் கொடிகாமம் வைத்தியசாலைக்கும் நோயாளர் காவு வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இன்று வடக்கு சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ப சத்தியலிங்கம், அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதனை வழங்கி வைத்துள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டியை கிளிநொச்சி பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ம.ஜெயராசா பொறுப்பேற்றுக்கொண்டார்