நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று வெள்ளிக்கிழமை (08) மாலை 4.00 மணி முதல் நாளை சனிக்கிழமை (09) மாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
1.பதுளை மாவட்டம் – ஹல்தும்முல்ல , பசறை, ஹாலி எல
2.கண்டி மாவட்டம் – பாததும்பர, தும்பனை
3.கேகாலை மாவட்டம் – தெஹியோவிட்ட , மாவனெல்லை,ரம்புக்கனை, வரக்காப்பொல, யட்டியந்தோட்டை, புளத்கொஹுபிட்டிய , ருவன்வெல்ல, தெரனியகல, கலிகமுவ , அரநாயக்க
4.குருணாகல் மாவட்டம் – மாவத்தகம
5.நுவரெலியா மாவட்டம் – வலப்பனை
6.இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட, குருவிட்ட