பாடசாலைகளில் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது தொடர்பாக விசேட சுற்றறிக்கை வெளியீடு

8 0

பாடசாலை கல்வி மற்றும் தகவல்தொடர்பாடலுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு இந்த சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கையில், கொவிட்-19 தொற்று பரவலின் போது  மாணவர்கள் தவறவிட்ட கற்றல் வாய்ப்புகளை மீட்டெடுக்க உதவும் வகையில் வட்ஸ் அப், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவை  இன்றும் மாணவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன .

மாணவர்கள் இந்த சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துவதால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.