மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து பிரமித்த பண்டார தென்னகோன் விலகியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் இன்று அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்தே அவரது மகன் பிரமித்த பண்டார தென்னகோன் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
தமது பதவி விலகல் கடிதத்தை மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்கவிடம் கையளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.