2005இல் மகிந்த ஜனாதிபதியாவதற்கு யார் காரணம்?

20 0

கடந்த 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றமைக்கு பிண்ணனியில் வன்னி மாவட்ட வேட்பாளர் எமில்காந்தன் பெரும் பங்காற்றியதாக ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலின் போதான சம்பவங்களில் தனது பங்கு இல்லை எனவும், அதற்கு அக்காலப்பகுதியில் இருந்த இரு முக்கிய பலம் பொருந்திய தரப்புகளாலும் இராஜதந்திர தரப்புகளாலும் எடுக்கப்பட்ட முடிவுகளே அவை என எமில்காந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பால் பகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட முன்னர், சுனாமி நிதியத்திற்கு வந்திருந்த பெரும்பாலான நிதியில் ஒரு பெரும் தொகை தம்மூடாக வழங்கப்பட்ட பின்னரே விடுதலை புலிகள் அமைப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த 30 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்த காலத்தில் வடக்கு – கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாக கட்டமைப்பு அதாவது அரச கட்டமைப்பு தான் செயற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.