வென்னப்புவ – கிம்புல்கான பிரதேசத்தில் 7ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண்ணும் ஆண் ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்த ஒருவரே முன் வந்ததாகவும், மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.