இந்திய நன்கொடையில் மொனராகலையில் மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம் திறப்பு !

16 0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கிராமிய மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அத்தபத்து ஆகியோர் இணைந்து மொனராகலையில் தித்தவெல்கிவல மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம் ஒன்றை கடந்த 04 ஆம் திகதி திறந்து வைத்துள்ளனர்.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் மூலம் சுமார் 24 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக இந்த வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வீடமைப்புத் திட்டமானது முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில்  ஒப்பந்தம் அடிப்படையில் கைச்சாத்திடப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

இத்திட்டமானது மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மொனராகலை மாவட்ட செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, ஊவா மாகாண சபை மற்றும் மொனராகலை மாவட்டத்தின் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.