மஹிந்தவினால் இலங்கை நாடாளுமன்றம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டது – பிரதமர் ரணில்

305 0

கடந்த காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜவினால் இலங்கை நாடாளுமன்றம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மத்தியில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவிததுள்ளார்.

நாடாளுமன்றத்தை மீறியவகையில் ஜனாதிபதி செயற்பட்டதினால் நாடு பல்வேறு வகையில் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

இந்த நிலையை மாற்றி நாடாளுமன்றத்;தின் உயர்தன்மையை நிலைநாட்ட தாம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.